கந்தபுராணத்
தொடர்புடைய தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் பற்றிய
வரலாறு, நிர்வாகம், தொடரும் பணிகள் பற்றிய விபரங்களை
வளர்ந்துவரும் நாகரிக முன்னேற்றத்தில் இணையத்தள மற்றும்
பல்வேறு தொடர்பாடல் சாதனங்களால் சுயநல தேவைகளுக்காக
விளம்பரப்படுத்துவதாலும், துஷ்பிரயோகங்கள் செய்வதாலும்
உண்மையான சைவ மக்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
எனவே எதிர்காலத்தில் உண்மைநிலையில் இப் புனித ஆலயம்
சைவமக்களின் பக்திமார்க்கம், ஆன்ம ஈடேற்றம், பெருமான்
திருவருள்தன்மை மேலோங்க இப்பணி அவசியமாகின்றது.
"தொண்டைமான் ஆற்றருகே தொண்டர்களை காக்க
கண்டவர்கள் விண்டில்லாத வேதப்பொருளாகி
கதிர்காமர் மனம்கொண்டு அமைத்த நற்கோயிலிது
செல்வச்சந்நிதி எம் செல்வத்தின் சந்நிதியே."
வாழ்த்துச் செய்திகள்
முன்னாள்
யாழ் அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி..
யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் சொல்லொணாச் சிறப்புக்களுடனும், வரலாற்று விழுமியங்களுடனும், பெரும் பக்தி நிகழ்வுகளுடனும் சீர்பெற்று நிற்கும் எமது சிறீ செல்வச் சந்நிதி ஆலயம் உலாகளாவிய ரீதியில் எம் மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கின்றது...மேலும்..
யாழ் உதவி அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி..
தொடர்பாடலில் நவீன சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் இவ்வாலயம் தொடர்பாகவும் இந்த வசதி ஏற்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும் எனலாம்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலரின் ஆசிச்செய்தி..
வுரலாற்றுச் சிறப்பு மிக்க சிறீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்குமென இனையத்தளமொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதையிட்டு மெருமகிழ்வுகொள்கிறேன்.. மேலும்..
ஆலய பிரதம குரு திரு.ஆ.சிவசண்முக ஐயரின் ஆசியுரை..
உலக பரிணாம உயர்வு கற்காலத்தில் இருந்து தற்காலம் வரை வியாபித்துள்ள இவ்வேளையில் விஞ்ஞான வளர்ச்சிக்கு அவனருளால் மெஞ்ஞானம் பெற வேண்டியும் அறிவை அருளிய அறிவால் பெருமான் அவர்தம்பணி திருப்பணி எனவேண்டி நல்லாசி கூறுகிறேன்.
-பிரதமகுரு-
ஆலய சிரேஸ்ட பூசகர் திரு வி.தெய்வேந்திர ஐயரின் ஆசியுரை..
இப்புனித திருத்தலத்திற்கும் இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டது உலகின் பல பாகங்களிலுமுள்ள சைவப் பெருமக்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதமாகும். எதிர்காலத்தில் இப்பணி சிறப்பாக மேலோங்கி எல்லோரும் இன்புற்றிருக்க எம்பெருமான் நல்லருள் நல்குவாராக.