முகப்பு  |   வரலாறு  |   பூசைகள்  |   பூசகர்கள்   |    நிழற்படங்கள்   |    வெளியீடுகள்  |    மடாலயங்கள்   |  வம்சாவழி |   ஆலயத்தின் பணிகள்  திருப்பணிகள் |   தொடர்புகள்
 
   

அன்புடையீர்!


சைவப்பெருமக்களின் பெருமதிப்பிற்குரிய ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலயம் கடந்த 1986 வன்முறையில் பாரிய சேதத்திற்குள்ளானது ஆலயம், ஆலயஉடமைகள் ,மணி, மணிக்கோபுரம் பெருமான்எழுந்தருளும்வாகனங்கள் யாவும் சேதமாகின இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்  ஆலய உரிமையாளர்கள் அடியார்கள் அளித்த ஊக்குவிப்புகளினால் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு 1988இல் மகாகும்பாபிஷேகத்துடன் வழமையான செயற்பாடுகள் தொடர்ந்தன எனினும் 1990இல் மீண்டும் தோன்றிய பதட்டநிலையாலும் ஆலயம் சுற்றாடல் சேதமாகின 1994 ன்பின் நிலமை சீரடைந்ததும் ஆலய புனருத்தாரணப்பணிகள் தொடர்ந்தமையால்  மணிக்கோபுரம் மணிமண்டபம் நந்திமண்டபம் ஆகியன சீராக அமைக்கப்பட்டன. காண்டாமணியும்பொருத்தப்பட்டது.

அந்நாளில் இவ்வாலயக்கட்டிடங்கள் சுண்ணாம்புக்கலவையால் கட்டப்பட்டமையால் 2008இல் உடைக்கப்பட்டு சீராக ஸ்திரமாக்கப்பட்டு மீண்டுமொரு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதன்பின்பாரியபணியாக சுற்றுமண்டபப்பணி 181 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு மகோற்சவமுன்பதாக மூன்றிலொரு பங்கு முற்றுப்பெற்றது. எனினும் ஒப்பந்தக்காரருக்கு  65 இலட்சம் கடன்பாக்கியாக இருந்து இருவருடங்களுக்குமுன் கடன் தீர்க்கப்பட்டன. இதன்பின்னர் சுற்றுமண்டபத்தின் எஞ்சிய பணிகள், சரஸ்வதிமண்டபம் வாகனசாலைப்பணிகளுடன், ஆலயநிலமும் ஸ்திரமாக்கப்பட்டன. சுற்றுமண்டபப்பணியில் நாவலடிமுகப்புத்தோற்றம், வள்ளியம்மன்வாசல்முகப்புத்தோற்றம், மின்இணைப்பு, அலங்காரவேலைகள் ,தீந்தைபூசுதல் மற்றும்மடைபள்ளி களஞ்சிய அறைகள் ஸ்திரமானநிலம்அமைத்தல் பணிகளுடன் 2004 முதல் தேர்முட்டி அடைப்புக்கதவுகள் பழையதகரம் கிடுகுகளால் அடைக்கப்பட்டு ஆலயவாசலில் அடியார்கள்பலருக்கும் அதிருப்பதியாவதால் நவீனமுறையில் ஸ்திரமான அடைப்புக்கதவுகள் பொருத்தப்படவுள்ளன.

        எனவே இப்பாரியபணிகளுக்கு தாங்கள் மனமுவந்து பங்களிப்புகளை வழங்கி பெருமான் அருட்கடாட்சத்தை பெறுவீர்களாக.

நன்றி
சுபமங்களம்

ஆலயஉரிமையாளர்களும்
பரிபாலனசபையினரும்.
 

நிழல்படங்கள்

 

காணொளி

 

கோவில் தளங்கள்

ஸ்ரீ நாகபூசணி
மானிப்பாய் மருதடி விநாயகர்
தாவடி ஸ்ரீ வடபத்தரகாளி
காட்டுமலைக்கந்தன்
 
 

நாட்காட்டி 2019

தொடர்புகளுக்கு

 
 

 

 
     
 
 

    All Rights Reserved By  © sannathy.com   2011   

Solution By SpeedITnet