முகப்பு  |   வரலாறு  |   பூசைகள்  |   பூசகர்கள்   |    நிழற்படங்கள்   |    வெளியீடுகள்  |    மடாலயங்கள்   |  வம்சாவழி |   ஆலயத்தின் பணிகள்  திருப்பணிகள் |   தொடர்புகள்
 
    Untitled Document

 கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் ஆலயத்திற்கு பக்தி மணம் கமழும் தெய்வீக வரலாறு உண்டு திருச்செந்தூர் என்னும் பதியில் இருந்து கந்தப் பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரா புரிக்கு சூரனிடத்து தூதனுப்பினார் தூதுவனான வீரவாகு தேவர் முதல் முதலாக வட இலங்கையின் வல்லி நதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் இவரது திருப்பாதம் பூமியின் கண் பதிந்த போது கல்லோடையாக காணப்படும் இடத்தில் பாதச் சுவடுகள் தோன்றின. இவ்வாறு வீரவாகு தேவரது பாதச் சுவடுகளை இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் பாதச் சுவடுகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. வீரவாகுத் தேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திரா புரிக்கு சூரனிடத்துச் சென்று திரும்பி திருச் செந்தூர் செல்வதற்கு மீண்டும் இந் நதிக் கரைக்கு வந்தார். வந்தபொழுது சந்திக் காலமாகி விட்டது எனவே அவருக்கு கந்தப் பெருமானுக்குரிய சந்திக்கால பூசை செய்ய வேண்டிய பணி மனத்தில் எழுந்த காரணத்தால் இவ் வல்லி நதிக்கரையில் எம்பெருமானுக்குரிய சந்திப் பூசையை செய்து வழிபட்டார். இவ்வாறு வீரவாகு தேவரால் சந்திக்கடன் செய்யப்பட்ட இடம் சந்நிதியாக மருவி செல்வச்சந்நிதி என்று திருப் பெயரைப் பெற்றது. அன்று முதல் சகல செல்வம் அனைத்தையும் தனது திருவருளினால் வழங்கும் கந்தப் பெருமான் வீற்றீருக்கும் பதியாக தோற்றியது.


இச் செல்வச்சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்ட கந்தப் பெருமானை தேவலோக காந்தருவர் ஒருவர் மனக் கோயில் சமைத்து இடை விடாத மௌன தியானத்தின் மூலம் முத்தியடைந்து இறைவனது பாதார விந்தத்ததை போய்ச் சோர்ந்தார். அதன் வரலாற்றை நோக்கினால் 'ஐராவசு' என்ற தேவலோக காந்தருவர் வியாழபகவானது கட்டளைப்படி ஒழுகாது தவறியமைக்காக பகவான் 'நீ பூமியின் கண் பிறக்கக்கடவாய்' என்று சாபமிட்டார் இச் சாபத்திற்கு ஆளாகிய ஐராவசு மேலுலகமாகிய தேவலோகத்தில் இருந்து கீழ் உலகமாகிய பூமியின் கண் பிறந்து அல்லலுற வேண்டியதன் நிலையை உணர்ந்து தனக்கு சாப விமோசனம் தரும் படியும் தன்னை இரட்சிக்கும் படியும் பகவானை வேண்டி வணங்கினார்.. அதற்குப் பகவான் தனது சாபத்தை மாற்ற முடியாதென்றும் நீ பூமியின் கண் கதிர்காமத்திற்குபு; பக்கத்தில் உள்ள காட்டில் யானையாக அவதரித்து வரும்போது கதிர்காமக் கந்தனை வணங்க வரும் சிகண்டி முனிவரால் சாப விமோசனம் பெற்று சந்நிதி சென்று தியான வழிபாடு செய்து சமாதி அடைவதன் மூலம் இறைவனது பாதர விந்தத்தை பற்றுவாய் என்று கூற்னார்;..இதன் பிரகாரம் கதிர் காமத்திற்கு அயலில் உள்ள காட்டில் ஐராவசு யானையாக அவதரித்து வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இவ் யானைக்கு யானைத்தீ என்ற நோய் பீடிக்கலாயிற்று இதன் காரணமாக யானையானது காடுகள் மரங்கள் உயிரினங்கள் பலவற்றையும் அழித்துக் கொண்டிருந்தது.


இது இவ்வாறு இருக்க தேவலோகத்தில் உள்ள இசைப் பிரியனாகிய சிகண்டி எனும் முனிவர் முத்தமிழ் முதல்வாரன சுப்பிரமணியப் பெருமானை அனுகி அடியேன் இசை நுணுக்கங்களை மேன்மேலும் அறிய விருப்புடையேன் ஆகி இருத்தலால் அவற்றை அறியத் தருமாறு வேண்டினார். அதற்கு எம் பெருமான் யாம் முத்தமிழ் வித்தகரான அகத்திய முனிவருக்கு உபதேசித்துள்ளோம்;. ஆவர் தென் பொதிகை மலையில் இருப்பதால் அவரிடம் சென்று கேட்டு அறியும் படி திருவாய் மலர்ந்தருளினார் இதன் பிரகாரம் சிகண்டி முனிவரானவர் பொதிகை மலை சென்று அகத்தியரிடம் இசை நுனுக்கங்களை கேட்டறிந்தார் அதன் பின்னர் கந்தப் பெருமானை கதிர்காமத்தில் கண்டுகளித்து தரிசனம் பெற கதிர்காமம் நோக்கி புறப்பட்டார். அவர் கதிர்காமம் நோக்கி காடுகளினுடாக வந்துகொண்டிருக்கையில் யானைத்தீ என்ற நோயால் பீடிக்கப்பட்ட யானையானது காடுகள் மரங்கள் முதலியவற்றை அழிவு செய்துகொண்டிருப்பதைக் கண்டார் அவ் யானையானது இவரையும் இவரது சீடர்களையும் கொல்வதற்கு பிளிற்றிக் கொண்டு இவர் முன் எதிராக காடுகளையும் தருக்களையும் அழித்து வந்துகொண்டிருந்தது இதனைக் கண்ணுற்ற இவரது சீடர்கள் முனிவரை அனுகி தேவரீர் எங்களை காத்தருள்க என்று வேண்டி நின்றனர்.

 அவ் வேளையில் முனிவர் தனது ஞான சிருஸ்டியினால் இவ் யானையினது பூர்வீக பிறப்பை நோக்கியபோது அதில் வியாழ பகவானது சாபத் தன்மையும் விமோசனத்தையும் அறிந்து கொண்டார். அந்த மாத்திரத்தே கதிர்காமக்கந்தப் பெருமானை மனத்தில் தியானித்துக் கொண்டு'சடாச்சர' மந்திரத்தை உச்சரித்து அருகில் இருந்த வெற்றிலையை தன் கையினால் நுள்ளி எடுத்து இவ் வெற்றிலையானது வேலாகச் சென்று அழிக்குக என்று கூறி விடுத்தாh.; அவ் வெற்றிலையானது சுப்பிரமணிய கடவுளின் திருவருளினால் கதிர்வேலாக மாறிச் சென்று யானையினது உடலைக் கிழத்தது கிழித்த மாத்திரத்தே யானையானது அவ்விடத்தில் வீழ்ந்தது அவ்வாறு வீழ்ந்த இடத்தில் ஒரு தேவ உருத்தோன்றி' ஐயனே நான் முன்பு தேவலோகத்தல் ஐராவசு எனும் காந்த ரூபானாய் இருந்தேன் வியாழ பகவானது சாபத்தின் காரணமாக இவ்வாறு யானை உருவில் இப் பூமியின் கண் பிறந்து நீண்ட காலமாக வருத்தமுற்று வந்துள்ளேன் தேவரீர் விட்ட வெற்றிலையானது கதிர்வேலயுத கடவுளின் திருவருள் வேலாக மாறி எனது உடலை ஊடூரிவிச் சென்றதால் எனது சாபம் நீங்கிற்று' என்று கூறி பணிந்து நின்றார். இதைக்கண்ணுற்ற முனிவரும் அவரதுசீடர்களும் மற்றையோரும் ஆச்சரியம் அடைந்து பக்திர சக்திமூர்த்தியே என பரவிப் பணிந்து வணங்கினார்கள். ( மேலும் )
 

      
 

நிழல்படங்கள்

 

காணொளி

 

கோவில் தளங்கள்

ஸ்ரீ நாகபூசணி
மானிப்பாய் மருதடி விநாயகர்
தாவடி ஸ்ரீ வடபத்தரகாளி
காட்டுமலைக்கந்தன்
 
 

நாட்காட்டி 2019

தொடர்புகளுக்கு

 
 

 

 
     
 
 

    All Rights Reserved By  © sannathy.com   2011   

Solution By SpeedITnet