முகப்பு  |   வரலாறு  |   பூசைகள்  |   பூசகர்கள்   |    நிழற்படங்கள்   |    வெளியீடுகள்  |    மடாலயங்கள்   |  வம்சாவழி |   ஆலயத்தின் பணிகள்  திருப்பணிகள் |   தொடர்புகள்
 
    New Page 2

இதன்பின்னர் ஐராவசுவை தம்மைப்போன்ற முனிவர்களான தமது சீடர்களுடன் கதிர்காமக் கந்தப் பெருமானை நோக்கிச் செல்லலானார்கள். அவ்வாறு சென்று வேலை முடிந்தது என்று கூறி சிகண்டி முனிவர் பெருமானிடத்தும் ஐராவசு முனிவரிடத்தும் விடைபெற்று சீடர்களுடன் கோயிலை நோக்கி செல்லலானார் அவ்வேளையில் ஜராவசு முனிவர் தன்னையும் ரட்சிக்கும்படி கேட்டபோது அந்தப் பெருமான் நமது வீரவாகுதேவர் இவ் ஈழத்தின் வட கரையினை வல்லி நதிக்கரையோர்த்தில் எனக்குத் சந்திக்கடன் செய்து வழிபாடு செய்தார்; அவ்விடத்தில் புனிதத்தை மேலோங்குவதற்காக செய்த வழிபாடு மௌன வழிபாட்டின் மூலம் பூசைகள் செய்து தியானத்தின் மூலமாக எனது பாதாரவிந்தத்தை வந்தடைவாய் என்று கூறி திருவாய்மலர்ந்தருளினார் இதன் பிரகாரம் ஜராவசு முனிவர் வடக்கே உள்ள வல்லி நதிக்கரைக்கு வந்து எம்பெருமான் கூறியவாறு வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்து இடத்தில் இருந்துகொண்டு மனக் கோயில் செய்து வரலானார் முந்தை வினை அறுக்க பெருமானார் முத்தியை கொடுத்தருளினார்.


ஜராவசுமுனிவர் தியான வழிபாடு செய்து தவம் இயற்றிய இடத்தில் முத்தியடைந்தார் இந்த இடம்தான் வல்லிநதிக்கரையில் உள்ள பூவரசம்மரத்தின் அடியாகும் அவ் முனிவர் சமாதி அடைந்த இடத்தில் காணப்பட்ட பூவரசம்மரமானது பெரியவிருட்சமாகி தொழும் அடியார்களது துன்பத்தை அகற்றும் தெய்வத்தன்மை பெற்றது அம் மரத்தின் அடியிலே தோன்றிய பூவரசுமரமானது இன்னும் இக்கோவில் நடுவில் காணப்படுகிறது .இதைப்பற்றி கூறிய பக்தி சிரோன்மணி வேதநாயகப்பிள்ளை சொல்லலானார் செல்வச்சந்நிதி பூவரசைத் தொமும் அடியார்கள் பல்லாயிரத்துன்பம் எல்லாம் அகல பரிவுடனே......என்று பாடினர் இம்முனிவர் முத்தியடைந்து சமாதி அடைந்த பூவரசமரத்து அடிக்கு அருகிலேயே வீராகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்திலே இன்று பக்திரச்சக்தி முகூர்த்தத்தில் கந்தப்பெருமான் வேல் ரூபத்தில் கோயில்கொண்டுள்ளார்


சிகண்டி முனிவர் விடுத்த வெற்றிலையானது வேலாகச்சென்று ஜராவசுவுக்கு சாபவிமோசனம் கொடுத்த காரணத்தினால் இவ் ஆலயத்தில் வெற்றிலை வைத்து பக்திரசக்தி வழிபாடு செய்வதுடன் எமுந்தருளிவரும் எம்பெருமானாகிய வேலின் நடுவில் முக்கோணவடிவில் பொட்டுடன் வெற்றிலை வைத்து வீதி வலம் வருவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது உலகில் வேறு எவ்விடத்திலும் இல்லாத தனித்துவமான வழிபாட்டை கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் முகூர்த்தத்தை பக்திரசக்தி முகூர்த்தம் என்றும் வழிபாடு மானசிக மௌன அன்பு வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது இதன்காரணமாக இத்திருத்தலம் ஞானலய திருத்தலமாக மிளிர்கிறது .இன்று செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்த வரலாற்றினை நோக்கின் இன்றைய தோற்றத்திற்கும் ஆரம்பத்திற்கும் காரணகர்த்தாவாக மருதர் கதிர்காமர் என்ற கந்தப்பெருமானது கருணைக்கழல் பற்றிய பூசாரியாருடன் ஆரம்பமாகிய உண்மை தெளிவாகத் தெரிகின்றது குருகுலமாகிய வருணகுலத்தில் பரதசாதியில் இடை விடாத தியானவழிபாட்டு மூலம் எம்பெருமானது. பாதாரவிந்தத்தைப் பற்றிய மருதர் கதிர்காமரே இவ்ஆலயத்தில் தோன்றி வழிபாடு செய்த பின் இன்று உள்ள அவர்வழித் தோன்றிய சந்ததியினருக்கு வழிபாடுசெய்ய விட்டுச்சென்றுள்ள தெய்வீகப்பொக்க்கிசமாகும் 19ம் நூற்றான்டின் முற்பகுதியில் இவ் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த பரதகுலத்தவர்களில் ழூத்தவரும் பக்திமானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ் ஆற்றில் மீன் பிடித்து சீவியம் நடத்தி வந்தார் இவர் மீன் பிடிக்கச்செல்லும்முன்னர் இங்கு சமாதியடைந்த பூவரசமரத்தினை வணங்கியே செல்வது வழக்கம் இவர் நாள்தோறும் இவ்வாறு செல்வதன் ழூலம் பக்தி மேம்பாட்டினை பெற்றுக்கொண்டு வரலாயினார் இவ்வாறு இவரது பக்தி வரலாற்றினை கண்ணுற்ற எம்பெருமானார் ஆற்றங்கரையில் தன்னை நாள்தோறும் நினைந்துருகி வணங்கி மீன்பிடிக்கும் கதிர்காமர் முன்னர் மனித உருவில்தோன்றி கதிர்காமா என்னிடம் இக்கரைக்குவா என அழைத்தார் இதன் பொருள் நீ செய்யும் தொழிலை விடுத்து என்பால் என் பாதார விந்தத்தைப் பணிய என்னிடத்தில் வா என்பதாகும் இதனைக்கேட்ட கதிர்காமர் ஆற்றின்மேலிருந்து கரைக்கு வந்தார் இவ்வாறு வந்துசேர்ந்தவரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தினடியினையும் அதன்அருகில் வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்தினையும் காட்டிக்காட்டி நீயே எல்லா வகையிலும் ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார்.

முனிவர் சமாதியடைந்த இடத்தில் குரு பூசை செய்யவும் வேண்டும் என பெருமானார் கேட்டதன்படி கதிர்காமரும் அவர்பின்வரும் சந்ததியினரும் பிதிர்க்கடமை போன்று செய்து வரலானார்கள். இது செய்யாவிட்டால் மிகுந்த தொல்லைகள் ஏற்படும் எனக்கூறினார் இதனால் அன்றுமுதல் இன்றுவரை இதனைக் கடைப்பிடித்து பூஜைகள்செய்து வருகின்றனர். கதிர்காமர் முதலில் ஆலயம் அமைத்து பூஜைசெய்தபின் மற்றைய பங்காளரது காணிகள் யாவற்றையும் கொள்விலையாகவேண்டினார் இதற்கு தோம்பு உறுதி என்பன சான்றாக உள்ளன கதிர்காமரும் அவர் மகனான வேலுப்பின்ளை ஜயரும் மற்றும் பிள்ளைகள் எல்லோருமாக இக்கோயிலை முதன்முதலில் காலத்தில் எம்பெருமான் கதிர்காமருடன் உறவாடிய காலம் 1824ம் ஆண்டு கோயில் பதிவேடு கதிர்காமரும் வேலுப்பிள்ளை ஜயரும் மற்றும் கதிர்காமரது பிள்ளைகளும் பனையோலையால் வேயப்பட்ட சிறு கொட்டில் அமைத்து அதில் வழிபாட்டுப் பூஜைசெய்தார்கள். இதன் பின் இவ் ஆலயத்தை எம்பெருமான் கூறியபிரகாரம் கட்டி நிற்குண பிரமமாக வைத்து வழிபடத்தொடங்கினார் பெருமான் கூறும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்வதே பெரும்பணி என்றுகூறி கதிர்காமர் பூஜைசெய்து வந்தார் அதன்பின்னர் தனது வழித்தோன்றல்களான பிள்ளைகளுக்கு இங்கு கைக்கொள்ள ணே;டிய நடைமுறைகளையும் பூசைமுறைகளையும் உற்சவ முறைகளையும் உபதேச முறையில் கூறினார்.

 இவர்களும் தமது பிள்ளைகளுக்கு கூறி சந்ததி சந்ததியாக உபதேச முறை கூறப்பட்டு வந்தது இதன் பிரகாரமே கர்ண பரம்பரையாக கூறப்பட்ட தொண்டுகளை மற்றைய பரம்பரையினரும் கைக்கொண்டு வருகின்றனர் இவர்கள் இக்கோயிலின் சுற்றாடலிலும் சுற்றி உள்ள ஊர்களிலும் ஆசாரமாக புனிதமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பூசை முறையானது பக்தி மார்க்கத்தின் உச்ச ஸ்த்தானமாகும் செல்வச் சந்நிதி ஆலயத்தில் அமைர்ந்திருக்கும் ஆற்றங்கரை வேலவனது அருளாட்சிச் சிறப்பை நோக்கினால் செல்வங்கள் பலவற்றை தம்மை நாடி வரும் அடியார்க்கு நல்கி அவர்களது பிறவிப்பிணியை அறுக்கும் திருப்பிரசாதத்தை நாள்தோறும் கொடுத்த வண்ணம் இருப்பதைக் காணலாம் .நாள்தோறும் குறிப்பாக வெள்ளிக்கி;ழமை தோறும் வரும் அடியார்க்கு கந்தப்பெருமானது கருணைக்கடாட்சமும் கிடைக்கத் தவறுவதில்லை. .செல்வச்சந்நிதிக்குப் போய் செல்வம் எல்லாம் பெறுவீர் என ஓர் சித்தர் கூறினார். அரும் செல்வம் பொருட் செல்வம் கல்விச் செல்வம் பிள்ளைச் செல்வம் இவ்வாறு எண்ணிறைந்த செல்வங்களை வேண்டுவார் வேண்டுவதை ஈய்ந்தவண்ணம் இருக்கிறார் இவர் ஒரு அருட்கொடை வள்ளல் இவர் பசிப்பிணி அறுப்பதில் அன்னக்கந்தனாகவும் அன்னதானக்கந்தனாகவும் காட்சி தருகிறார். இக்கோயிலைச்சுற்றி ஏறக்குறைய 45 மடங்கள் உள்ளன இவற்றில் அன்பர்கள் தம் நேர்த்தி மூலம் அன்னத்தை தானமாக கொடுக்கின்றனர் தீராத நோய்களை தீர்ப்பதில் கல்லோடைக் கந்தன் பெரும் வைத்தியராக காட்சியளி;க்கின்றார். நோயுற்றவர்கள் இங்கு வந்து இவ்வாற்றில் மூழ்கி பிறவிப்பிணியை அவன் கழல் பற்றி கசிந்துருகிக் கேட்க அவர்களது தீராத்துன்பங்களை தீர்த்து வைக்கின்றாh.; வைத்தியர்களால் கைவிட்டு மருந்தால் மாற்றமுடியாத நோயை தன்திருவருளினால் மாற்றியதை கண்ணுற்ற பக்தி சிரோன் மணி வேதநாயகம் பிள்ளை ஆயள் வைத்தியர் எல்லாம் கைவிட்டு மாறாத வருநோய்கள் நினதருளா மரு மருந்தாற் போக்கி ஆனந்தமுறுகின்றன என்பார்..என பாடியுள்ளார்

தந்தையுமிலை தாயுமிலை சுற்றமுமிலை என்று வரும் அடியார்க்கு தங்கஇடமும் உண்ண உணவும் கொடுக்கிறார் காசியில் இறக்க முத்தி என்பது போல் சந்நிதியில் ஆயுளை நீக்க வரும் அன்பர்கள் அனேகம் இவர்கள் சந்நிதியில் ஆன்மா ஈடேற்றம் பெறுகிறார். என்று கூறுவதும் மிகையாகாது மனச்சாந்தி தேடி அடியார்கள் மனச்சாந்தியையும் அவரது திருவருளையும் பெறுகிறார்கள் .சந்நிதி முருகனது கருணையாவது காந்தத்தை விட கவரும்சக்தி உடையது .அவரது திருவருள் செல்லாத இடமே கிடையாது .ஜேர்மனில் உள்ள கௌரிபாலாவை பல்லாயிர மைல்களில்; இருந்து அழைத்து அவர் இங்குவந்து தியானமூலம் வழிபாடு செய்கின்றார் இவ்வாறு சந்நிதிக்கந்தனது சச்தியால் கவரப்பட்ட கௌரிபாலா என்ற அடியார் ஆச்சிரமத்திற்கு அருகாமையில் இருப்பதை காணலாம். இத்தகைய சந்நிதி வேலவன் ஒரு கருணைக்கடல் அவரது கருணைக் கடாட்சம் எளிதில் எல்லோர்க்கும் கிடைக்கக்கூடியது அவரது அருட் திறனை ஆயிரம் நாவை உடைய ஆதிசேடனாலும் வருணித்து கூறமுடியாது பரந்து கிடக்கும் பார் வெளியில் பரம் சோதியாக பூரணத்துவமாக பொலிந்து விளங்குகிறார் செல்வச்சந்நிதிக் கந்தப்பெருமான்.
 

பிதிர் ஞானமார்க்கம்
சகலமும் தருவார் சந்நிதி முருகன்
அவன் தாள் வணங்கி அவன் அருள் பெறுவோம் ''

சுப மங்களம்

 

நிழல்படங்கள்

 

காணொளி

 

கோவில் தளங்கள்

ஸ்ரீ நாகபூசணி
மானிப்பாய் மருதடி விநாயகர்
தாவடி ஸ்ரீ வடபத்தரகாளி
காட்டுமலைக்கந்தன்
 
 

நாட்காட்டி 2018

தொடர்புகளுக்கு

 
 

 

 
     
 
 

    All Rights Reserved By  © sannathy.com   2011   

Solution By SpeedITnet