முகப்பு  |   வரலாறு  |   பூசைகள்  |   பூசகர்கள்   |    நிழற்படங்கள்   |    வெளியீடுகள்  |    மடாலயங்கள்   |  வம்சாவழி |   ஆலயத்தின் பணிகள்  திருப்பணிகள் |   தொடர்புகள்
 
    Untitled Document
ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகள்..

ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் வெகுமும்மரமாக நடைபெறுகின்றன.ஆலயத்தின் பாரிய மதிப்பீட்டைக் கொண்ட சுற்றுமணடபத்தின் மீதப்பணிகள் தொடரவுள்ளன. மீதப்பணிகளுக்கான மதிப்பீட்டினை ரூபின்ஸ் ஸ்தாபனத்தார் ஆலயத்திருப்பணி நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.சுற்றுமண்டபப்பணியின் முக்கியத்துவத்தையும் ஸ்திரமான வேலை அமைப்பினையும் நேரிலும் உள்ளுர் உறவினர்கள் மூலமும் தெரிந்து கொண்ட உள்நாட்டுவெளிநாட்டு அன்பர்கள் திருப்பணிநிதிக்கு தங்கள் பங்களிப்பை செய்கின்றனர். பல வெளிநாட்டு அன்பர்கள் இப்பணியை வியந்து வீடியோக்களும் புகைப்படங்களும் எடுத்துச்செல்கின்றனர்.இதன் பலனாக இச்சுற்றுமண்டபத்தையும் ஆலயத்தையும் இணைக்கும்பணிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கான கம்பிவகைகளும் மணலும் அடியார்களின் மனமுவந்த பங்களிப்புகளினால் பெறமுடிந்துள்ளது. மேலும் வேலைகள் ஆரம்பிக்க சிமெந்து கிறேசர் ஆகியன சேகரிக்க்பட்டு இருவாரங்யளில் முடிவடையும்.அதனைத் தொடர்ந்து பூச்சுவேலைகளும் தூண்களில் ஆடுமயில்கள் பொருத்தப்படவுள்ளன. மகோற்சவத்தின் முன்னர் ஆலயத்தின் பெரும்பகுதியில் ஸ்திரமான நிலம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.பெருமான் திருவருளும் அடியார்களின் மனமுவர்ந்த பங்களிப்புக்களும் இன்றியமையாதன. எனவே இப்பணிகள் மகோற்சவத்தின் முன்பதாக நிறைவேறிட பெருமான் அன்பர்கள் தாராளமாக மனமுவந்து அன்பளிப்புசெய்யவும்.நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாகனசாலைப்பணி பற்றி..

இதுவரைகாலமும் பெருமான் உற்சவத்திற்கான வாகனங்கள் பழைய மடம் ஒன்றிலேயே வைக்கப்பட்டிருந்தன.இம்மடக்கட்டிடம் சுண்ணாம்பினால் கட்டப்பட்டு மிகவும் பழைமைவாய்ந்தமையால் கட்டிடங்கள் மட்டுமின்றி கோப்புசமரங்கள் ஓடுகளும் பாதிப்புக்குள்ளாகியது.இதனால் தற்போதைய நிர்வாகம் அதனை ஸ்திரமான முறையில் சிறந்த வடிவமைப்பில் வாகனசாலையை அமைத்து முடிவடையும்தறுவாயில் உள்ளது.மகோற்சவஉபயகாரர்களும் வாகனஉரிமைளாளர்களும் மட்டுமின்றி பெருமான் அன்பர்களும் இப்பணிக்கு மனமுவந்து பங்களிப்புசெய்யவும்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் சரஸ்வதி மண்டப்பணி பற்றி..

ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் வடக்குப்பகுதியில் வன்செயலினால் பாதிக்கப்பட்டிருந்த சரஸ்வதிமடலாலயம் அண்மையில் புனரமைக்கப்பட்டு மூலஸ்தானமும் அதனோடு அமைந்த மண்டபமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளத.தற்போது அடியார்களின் வசதிகருதி சரஸ்வதி அம்மன் அடியார்கள் சிலர் தரிசனமண்டபத்தையும் அமைத்து அதுவும் முடியும்தறுவாயில் உள்ளது. இதனால் ஆலயத்தில் ஆங்காங்கே பல திருப்பணிகளும் நடைபெற்று அடியார்களின் நெஞ்சங்களில் நிறைவும் பெருமான் மீது பக்தியும் மேலிடுகிறது.நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுற்று மண்டப வேலைகளின் நிழல்ப்படங்கள் சில..

  ; 

    

திட்டமிடப்பட்டிருக்கும் புனரமைப்பு வேலைகள்..

 1. சுற்று மண்டப மீதி வேலைகள் பூர்த்தியாக்குதல்.
 2. உள்வீதி மேற்பாக இணைப்புகள் பூர்த்தியாக்குதல்.
 3. ஸ்திரமான நில அமைப்புகள்.
 4. பிள்ளையார் குளம் புனரமைப்பு
 5. தேர் முட்டி, வாகன சாலை புனரமைப்பு
 6. அடியார்களின் நலன் கருதி தங்குமிட வசதி, குடிநீர், சுகாதாரம், மலசலகூடம் மற்றும் ஏனைய வசதிகள் செய்தல்.
 7. ஆலய வீதிகள் சுற்றாடல் விஸ்தரிப்பும், ஆலயத்திற்கு அண்மித்ததாக போக்குவரத்து தரிப்பிட வசதி ஏற்படுத்தல்.
    

இவ்வாலயத்தின் புனிதம் மேலோங்குவதுடன் அடியார்கள் பெருமானை வழிபாடு செய்து ஆன்ம ஈடேற்றம் பெற நல்லாலோசனைகளையும் முன்னெடுப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம்.


சிறீ செல்வச்சந்நிதி ஆலயத்திற்கான வங்கிக் கணக்குகள்:

 1. இலங்கை வங்கி பருத்தித்துறைக் கிளை
  Bank Of Ceylon,
  Pointpedro Branch
  Saving Account No:-7345848

 2. செலான் வங்கி - யாழ்ப்பாணம்
  Seylan Bank,
  Jaffna Branch,
  Saving Account No:- 0850-01308424-101
 3. கொமர்சல்வங்கி - நெல்லியடிக்கிளை
  Saving Account No:- 8108036333


 4. உங்கள் கருத்துக்களை தெரிவிக்க இங்கே அழுத்தவும்.

 

நிழல்படங்கள்

 

காணொளி

 

கோவில் தளங்கள்

ஸ்ரீ நாகபூசணி
மானிப்பாய் மருதடி விநாயகர்
தாவடி ஸ்ரீ வடபத்தரகாளி
காட்டுமலைக்கந்தன்
 
 

நாட்காட்டி 2019

தொடர்புகளுக்கு

 
 

 

 
     
 
 

    All Rights Reserved By  © sannathy.com   2011   

Solution By SpeedITnet